தூத்துக்குடி மாவட்டத்தில்மிதமான மழை
தூத்துக்குடி மாவட்டத்தில் மிதமான மழை பெய்தது.;
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி திங்கட்கிழமை காலை குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் லேசான மழை பெய்தது. நேற்று காலையில் மாவட்டத்தில் லேசான சாரல் மழை பெய்தது. காலையில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மதியத்துக்கு பிறகு நல்ல வெயில் அடித்தது.
நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை மாவட்டத்தில் தூத்துக்குடி 7 மில்லி மீட்டர் மழையும், சாத்தான்குளம் 8, திருச்செந்தூர் 6, காயல்பட்டினம் 6, குலசேகரன்பட்டினம் 9, சாத்தான்குளம் 15.4,கழுகுமலை 3, கயத்தார் 1, கடம்பூர் 2, விளாத்திகுளம் 2, கீழஅரசடி 1 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது.