தூத்துக்குடி மாவட்டத்தில்சமத்துவ பொங்கல் விழா

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-01-16 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி கருணாநிதி நகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. விழாவிற்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், ஐ.என்.டி.யூ.சி மாநில பொதுச்செயலாளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான பெருமாள்சாமி தலைமை தாங்கினார். எஸ்.சி. எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் ராஜாராம் முன்னிலை வகித்தார்.

விழாவையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

பெருங்குளம்

பெருங்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் டாக்டர் எஸ்.புவனேஸ்வரி சண்முகநாதன் தலைமையில் சமத்துவ பொங்கலிட்டு அனைவருக்கும் வழங்கினர். விழாவில் பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரசேகரன் மற்றும் கவுன்சிலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

சாத்தான்குளம்

சாத்தான்குளம் பேரூராட்சியில் தலைவர் ரெஜினி ஸ்டெல்லா தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப், பேரூராட்சி செயலாளர் உஷா, துணைத்தலைவர் மாரியம்மாள் மற்றும் கவுன்சிலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். சமத்துவ பொங்கலிட்டு அனைவருக்கும் பரிமாறப்பட்டது. இதேபோன்று பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்