திருச்செந்தூரில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா நிர்வாகிகள் கூட்டம்
திருச்செந்தூரில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.;
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆனந்த விநாயகர் கோவில் வளாகத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். அனுமன் சேனா மாவட்ட தலைவர் தங்கராஜா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாநில பொது செயலாளர் ரவிகிருஷ்ணன் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்.
கூட்டத்தில், மாநில செயலாளர் பாலன், திருச்செந்தூர் ஒன்றிய துணை தலைவர் சத்திகுமார், நகர தலைவர் ரமேஷ், நகர இளைஞரணி தலைவர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.