திருச்செந்தூரில்3 ஆம்னி பஸ்கள் பறிமுதல்

திருச்செந்தூரில் 3 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-10-20 18:45 GMT

திருச்செந்தூர்:

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தனியார், அரசு அலுவலகங்கள், சொந்த தொழில் செய்பவர்கள் தொடர்விடுமுறையை முன்னிட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் தனியார் ஆம்னி பஸ்களில் பலமடங்கு கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களிடம் வசூலித்து வருவதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவர் முனுசாமி உத்தரவின் பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர் பெலிக்ஸன் மாசிலாமணி, பறக்கும் படை அதிகாரி தனபால் ஆகிேயார் திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிக பயண கட்டணம், அனுமதி சீட்டு, சாலை வரி செலுத்தாமல் இயங்கிய 3 ஆம்னி பஸ்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்