திங்களூரில்வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடிகணவன்-மனைவி மீது வழக்குப்பதிவு
வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உஎ்து-ஸ்ரீளளலதயஜஷ
கோபி அருகே உள்ள திங்களூர் டி.டபுள்யு.சி.எஸ். காலனியைச் சேர்ந்தவர் அனிதா (வயது38). அதே ஊரைச் சேர்ந்தவர் அய்யப்பன். அவருடைய மனைவி கவிதா. இந்த நிலையில் இவர்கள் அனிதாவிடம் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர். அதனை நம்பி அனிதா அவர்களிடம் ரூ.3லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
இதைத்தொடர்ந்து இதுகுறித்து அனிதா அய்யப்பனிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் வேலையை வேறு ஒருவருக்கு ஏற்பாடு செய்து விட்டதாகவும், எனவே உங்கள் பணத்தை 4 மாதங்களில் திருப்பித் தருவதாகவும் கூறியுள்ளார். மேலும் அனிதாவை தகாத வார்த்தைகள் பேசி திட்டியதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து திங்களூர் போலீஸ் நிலையத்தில் அனிதா புகார் கொடுத்தார். அதன்பேரில் வேலை வாங்கி தருவதாக கூறி அனிதாவிடம் ரூ.3லட்சம் மோசடி செய்ததாக அய்யப்பன், கவிதா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.