தூத்துக்குடி மாநகராட்சியில் கம்ப்யூட்டர் வரி வசூல் மையங்கள் இன்று இயங்காது
தூத்துக்குடி மாநகராட்சியில் கம்ப்யூட்டர் வரி வசூல் மையங்கள் இன்று இயங்காது என ஆணையாளர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மறு வரை செய்யப்பட்ட 60 வார்டுகளிலும் அமைந்து உள்ள கட்டிடங்களுக்கு வரி விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வரி விதிப்புகளை தொடர்புடைய வார்டுகளுக்கு ஒதுக்கீடு செய்து கேட்புகள் சரி பார்க்கும் பணி இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதனால் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கம்ப்யூட்டர் வரி வசூல் மையங்கள் இன்று இயங்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த தகவலை மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ தெரிவித்து உள்ளார்.