தூத்துக்குடி மாநகராட்சியில்பகுதி சபா கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சியில் பகுதி சபா கூட்டம் வெள்ளிக்கிழமை நடக்கிறது என மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.;

Update: 2023-09-13 18:45 GMT

தூத்துக்குடி மாநகராட்சியிலுள்ள வார்டுகளுக்கு தலா 5 குழுக்கள் வீதம் 60 வார்டுகளுக்கு 300 பகுதி சபா குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த பகுதி சபா கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு அந்தந்த பகுதிகளில் நடத்தப்படுகிறது. இந்த பகுதி சபா கூட்டத்தில் மாநகராட்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே அந்தந்த பகுதி மக்கள் தவறாமல் பகுதிசபா கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள குறைகளை தெரிவிக்க வேண்டும். இந்த தகவலை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்