திட்டாம்பட்டி கிராமத்தில்மின்னொளி கபாடி போட்டி பரிசளிப்பு விழா

திட்டாம்பட்டி கிராமத்தில் மின்னொளி கபாடி போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.

Update: 2023-05-15 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே கொ. தீத்தாம்பட்டி கிராமத்தில் தேவேந்திரகுல வேளாளர் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட மந்தை அம்மன்- வைரவர் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, வெற்றி விநாயகர் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. போட்டியில் 40 அணிகள் பங்கேற்றன.

போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு நடந்த பரிசளிப்பு விழாவிற்கு பஞ்சாயத்து தலைவர் டி. பெரியசாமி தலைமை தாங்கினார். டாக்டர் டி. வெள்ளைச்சாமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் ரொக்கப் பணம் பரிசளித்தார்.

முதல் பரிசான ரூ.15 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையை தீத்தாம்பட்டி சின்ன முத்து கபடி அணியும், 2 -வது பரிசான ரூ.12 ஆயிரம் மற்றும் பரிசு கோப்பையை வி.வி.டி. ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், 3-வது பரிசான ரூ.8 ஆயிரத்தை வெற்றி விநாயகர் அணியும், 4-வது பரிசாந ரூ.6 ஆயிரத்தை வெற்றி விநாயகர் 'பி' அணியும் பெற்றனர். விழாவில் நகரசபை கவுன்சிலர் கவியரசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்