திருவாரூாில், அரசு ஊழியா்கள் ஊர்வலம்

திருவாரூாில், அரசு ஊழியா்கள் ஊர்வலம்;

Update: 2023-04-17 18:45 GMT

திருவாரூரில் அரசு ஊழியா்கள் சார்பில் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை மாநில துணை பொதுச்செயலாளர் பாண்டியன் தொடங்கி வைத்தார். முன்னதாக நடந்த ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதி அளிக்காத ராஜஸ்தான், ஜார்கண்ட், சட்டீஸ்கர் மாநிலங்களில் பங்களிப்பு ஓய்வூதிய தி்ட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இமாச்சலபிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த வாக்குறுதி எண் 309-ன் படி பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஊர்வலம் திருவாரூர் ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வரை சென்றது. இந்த ஊர்வலத்தில் பொதுச்செயலாளர் தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்