தேனி அல்லிநகரம் நகராட்சியில் மறுடெண்டர் நடத்த வேண்டும் பா.ஜ.க.வினர் கோரிக்கை

தேனி அல்லிநகரம் நகராட்சியில் மறுடெண்டர் நடத்த வேண்டும் என்று பா.ஜ.க.வினர் கோரிக்கை விடுத்தனர்;

Update: 2022-06-28 12:57 GMT

பா.ஜ.க. தேனி நகர தலைவர் மதிவாணன் தலைமையில் நிர்வாகிகள் தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமாரிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், "நகராட்சியில் இன்று (நேற்று) நடந்த டெண்டருக்கு பா.ஜ.க. கவுன்சிலருக்கு முறையாக தகவல் கொடுக்கவில்லை. ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற கவுன்சிலர்களின் ஒப்புதல் தேவை. எனவே, இந்த டெண்டரில் வெளிப்படை தன்மை இல்லாததால், இதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு, மறு டெண்டர் நடத்த வேண்டும்" என்று கூறியிருந்தனர். மேலும் அவர்கள், நகர்மன்ற அலுவலகத்தில் பிரதமர் நரேந்திரமோடியின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்