கடந்த 2022-ம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரெயிலில் 6.09 கோடி பேர் பயணம்..!

சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த 2022-ம் ஆண்டில் 6.09 கோடி பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.;

Update: 2023-01-02 12:56 GMT

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் துவங்கியதிலிருந்து நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது. கடந்த 2015 முதல் 2018 வரை 2,80,52,357 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.கடந்த 2019-ம் ஆண்டில் 3,28,13,628 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடைபிடிக்கப்பட்ட பொது முடக்கத்தினால் சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு மட்டும் 1,18,56,982 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று காலம் என்பதால் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை மெட்ரோ இரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு மட்டும் 2,53,03,383 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டில் 6,09,8,7,765 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளார்கள். இதுவரை சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த ஏழு ஆண்டுகளில் அதாவது, 2015-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 15,88,08,208 கோடி பயணிகள் பயணித்துள்ளார்கள். மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்