நயினார்பத்து கிராமத்தில்கால்நடை சுகாதார சிறப்பு முகாம்

நயினார்பத்து கிராமத்தில் கால்நடை சுகாதார சிறப்பு முகாம் நடந்தது.

Update: 2022-12-30 18:45 GMT

உடன்குடி:

நயினார்பத்து கிராமத்தில் கால்நடைபராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். கால்நடை பராமரிப்பு துறை திருச்செந்தூர் கோட்ட உதவி இயக்குனர் செல்வகுமார் சிறந்த கன்று மற்றும் சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிக்கு விருது வழங்கினார். தொடர்ந்து கால்நடைகளுக்கு சிகிச்சை, குடற்புழு நீக்கம், கருவூட்டல், மடி நோய்க்கு சிகிச்சையளித்ததுடன் வெறிநாய் தடுப்பூசியும் போடப்பட்டது. கால்நடைகளுக்கு தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. முகாமில ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கால்நடைகள் வளர்ப்போர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதில் நயினார்பத்து ஊராட்சி தலைவர் அமுதவல்லி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்