போடியில்தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போடியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-03-16 18:45 GMT

போடி தீயணைப்பு துறை சார்பில், போடி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள நடுநிலைப்பள்ளியில் தீத்தடுப்பு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு போடி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார். தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தீத்தடுப்பு குறித்து செயல் விளக்கம் அளித்தனர். மேலும் தீப்பற்றினால் அதில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்து கொள்வது என்பது குறித்தும் செய்து காண்பித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்