போடியில்வீட்டிற்குள் புகுந்த சாரை பாம்பு

போடியில் வீட்டிற்குள் புகுந்த சாரைபாம்பு பிடிபட்டது.;

Update: 2023-05-16 18:45 GMT

போடி திருமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா. நேற்று இவரது வீட்டு வாசலில் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதை கவனிக்காத மஞ்சுளா பாம்பு மீது மிதித்துவிட்டார். இதில் அந்த பாம்பு அவரை கொத்துவதற்காக சீறி உள்ளது. இதைக்கண்டதும் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்கு உள்ளே சென்றுவிட்டார். பின்னர் அவர் போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் பாண்டியராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் சுமார் ½ மணி நேரம் போராடி வீட்டிற்குள் பதுங்கி இருந்த பாம்பை பிடித்தனர். பிடிபட்டது 5 அடி நீள சாரைபாம்பு ஆகும். பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்