மலைத்தேனீக்கள் கொட்டியதில் தொழிலாளி சாவு

மஞ்சூர் அருகே மழைத்தேனீக்கள் கொட்டியதில் தொழிலாளி உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.;

Update:2023-10-26 01:45 IST

மஞ்சூர் அருகே மழைத்தேனீக்கள் கொட்டியதில் தொழிலாளி உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.

கூலி தொழிலாளர்கள்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள சிவசக்தி நகரை சேர்ந்தவர் மலையரசன்(வயது 50). இவருடைய மனைவி ராஜேஸ்வரி(38). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மலையரசனும், ராஜேஸ்வரியும் விவசாய கூலி தொழிலாளர்கள் ஆவர். அவர்கள் நேற்று காலையில் மஞ்சூரை அடுத்த எடக்காடு பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்கு வேலைக்கு சென்றனர்.

மலைத்தேனீக்கள்

அப்போது அங்கு திடீரென மலைத்தேனீக்கள் கூட்டம் வந்தது. அவை மலையரசனையும், ராஜேஸ்வரியையும் சுற்றி வளைத்து கொட்டின. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் வேலைைய பாதியிலேயே விட்டுவிட்டு தங்களது வீட்டுக்கு வந்தனர். உடனே அவர்கள் மயங்கி விழுந்தனர். இதை கண்ட உறவினர்கள், அவர்களை மீட்டு மஞ்சூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சிகிச்சை பலனின்றி...

அங்கு சிகிச்சை பலனின்றி மலையரசன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி ராஜேஸ்வரி மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்