மாநில ஓட்டப்பந்தயத்தில் எட்டயபுரம் மாணவி முதலிடம்
மாநில ஓட்டப்பந்தயத்தில் எட்டயபுரம் மாணவி முதலிடம் பிடித்தார். அந்த மாணவிக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பரிசு வழங்கி பாராட்டினார்.
எட்டயபுரம்:
திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரியில் படிக்கும் எட்டயபுரம் பேரூராட்சி வேன் டிரைவரின் மகள் சுபாஷினி. இவர் நெல்லை தூயசவேரியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில், மாநில அளவில் கோவாவில் நடைபெற்ற பெண்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற இவர் முதலிடம் பிடித்தார். அத்துடன், வருகிற டிசம்பர் மாதம் நேபாளில் தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தேர்வாகி உள்ள சுபாஷினியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. நேரில் அழைத்து பாராட்டி, கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஊக்கத்தொகை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. பிரதிநிதி கல்லடி வீரன், ஏ.ஐ.டி.யு.சி கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் சேது மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.