கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சியில், ஏ.சி.யில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு..!
கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில், ஏ.சி.யில் இருந்து புகை வந்தது.;
கோவை,
கோவையில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில், ஏ.சி.யில் இருந்து புகை வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது அரங்கில் இருந்த ஏ.சி.யில் பலத்த சத்தம் கேட்டு புகை வந்தது.
இதனால் அரங்கம் முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதனை தொடர்ந்து ஏ.சி.யின் செயல்பாடு நிறுத்தப்பட்டு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.