போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-10-31 18:45 GMT

ஒவ்வொரு ஆண்டும் 31.10.2022 முதல் வருகிற 6-ந் தேதி வரை லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டும், சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளான அக்டோபர் மாதம் 31-ந் தேதி தேசிய ஒற்றுமை நாளை முன்னிட்டும் நேற்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட குற்ற ஆவண காப்பகம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்தன் தலைமையில் போலீசார், அமைச்சுப்பணியாளர்கள் உறுதி மொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம், மாவட்ட போலீஸ் துறை அலுவலக நிர்வாக அலுவலர்கள் குமார், ராமசுப்பிரமணிய பெருமாள், சிவஞானமூர்த்தி மற்றும் போலீசார், அலுவலக கண்காணிப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்