கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட நோட்டீசில் தமிழ்மொழி புறக்கணிப்பு

கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட நோட்டீசில் தமிழ்மொழி புறக்கணிப்பு

Update: 2022-10-26 18:45 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் கோவை, பொள்ளாச்சி செல்ல ரெயில் நிலையத்தில் டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது பயணிகள் சிரமத்தை போக்க தெற்கு ரெயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தென்னக ரெயில்வே செல்போன் செயலிகள் மூலம் செல்போனில் ரெயில் டிக்கெட் புக்கிங் வசதி ஏற்படுத்தி உள்ளது. தற்போது கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்ட்டரில் தெற்கு ரயில்வே வணிக பிரிவு சார்பில் ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் ரெயில் நிலையத்திலிருந்து 20 மீட்டருக்குள் இருக்கும் பயணிகள், தங்களுக்கு தேவையான டிக்கெட்டுகளை டிக்கெட் கவுண்ட்டரில் ஒட்டப்பட்ட நோட்டீசில் உள்ள செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். அதேபோல் இந்த செயலி மூலம் சீசன் டிக்கெட்டுகளையும் பெற்றுக் கொள்ளலாம். இந்த நோட்டீசில் உள்ள தகவல்கள் அனைத்தும் முதலில் மலையாளம் மொழியிலும், 2-வது ஆங்கில மொழியிலும் உள்ளன. அந்த நோட்டீசில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான பொதுமக்களுக்கு அந்த நோட்டீசில் கூறப்பட்ட தகவல்கள் சரிவர தெரியவில்லை. இந்தநிலையில் கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் ஒட்டப்பட்ட நோட்டீசில் தமிழ் ெமாழி புறக்கணிக்கப்பட்டு உள்ளதற்கு பொள்ளாச்சி திராவிட இயக்க தமிழர் பேரவை அமைப்புச் செயலாளர் நாகராசன் கண்டணம் தெரிவித்ததோடு விரைவில் மக்களை திரட்டி போராட்டம் நடப்படும் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்