கூட்டுக் குடிநீர் தொட்டியில் தடுப்பு வேலி அமைக்காததால் விபத்து அபாயம்

கூடலூர் அருகே தடுப்பு வேலி அமைக்காததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2023-03-17 18:45 GMT

கூடலூர், கம்பம், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளுக்கு லோயர்கேம்ப் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக லோயர்கேம்ப் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன கடந்த 2007 -2008-ம் ஆண்டு முதல் கோம்பை, பண்ணைப்புரம் காமயகவுண்டன்பட்டி ஆகிய பேரூராட்சிகளுக்கும், நாராயண தேவன்பட்டி, குள்ளப்பக்கவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கும் 3 புதிய நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது

இதற்காக குடிநீரேற்று நிலையம் அருகே ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது இந்நிலையில் கூடலூர் நகராட்சிக்கு கொண்டு செல்லும் புதிய குடிநீர் தொட்டியில் தடுப்பு கம்பி வேலிகள் அமைக்கப்படவில்லை. இந்நிலையில் அருகில் உள்ள குடியிருப்பு பகுதி மக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள், வனவிலங்குகள் அடிக்கடி குடிநீர் தொட்டி பகுதிக்கு வந்து செல்வதால் எதிர்பாராமல் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது, சிலநேரங்களில் உயிர்பலி ஏற்படுகிறது. எனவே மாவட்ட குடிநீர் வடிகால் வாரியத்தினர் கூடலூர் நகர பகுதிக்கு கொண்டு செல்லும் புதிய குடிநீர் தொட்டியில் தடுப்பு கம்பி வேலி அமைக்க வேண்டும், பாதுகாப்பு பணிக்கு ஆட்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்