பெண்ணை கற்பழித்து கொன்ற வழக்கில் குண்டர் சட்டத்தில் தொழிலாளி கைது
பெண்ணை கற்பழித்து கொன்ற வழக்கில் குண்டர் சட்டத்தில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்;
கூடலூரைச் சேர்ந்தவர் அரவிந்த் குமார் (வயது 25). கூலித்தொழிலாளி. இவர் கடந்த மாதம் 17-ந்தேதி இரவு பொம்மக்கி அம்மன் கோவில்தெரு பகுதியில் உள்ள ரேஷன்கடை அருகில் மனநிலை பாதித்த பெண்னை தாக்கி கற்பழித்து கொலை செய்தார். இதையடுத்து கூடலூர் ெதற்கு ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்நிலையில் அரவிந்த் குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் முரளிதரன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அரவிந்த் குமாரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அரவிந்த் குமாரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.