விவசாயியிடம் ரூ.35 லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைதுகார் பறிமுதல்

விவசாயியிடம் ரூ.35 லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டாா் கார் பறிமுதல் செய்யப்பட்டது;

Update: 2023-08-09 21:00 GMT

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஓலாபுரத்தை சேர்ந்தவர் சிவாஜி (வயது 67) விவசாயி. ஈரோட்டை சேர்ந்த ராஜ்குமார் என்பவரிடம் 2 ஆயிரம் நோட்டுகள் அதிகளவில் இருப்பதாகவும் ரூ.35 லட்சம் கொடுத்தால் ரூ.50 லட்சத்துக்கு ரூ.2 ஆயிரம் நோட்டுகள் தருவதாகவும் உறவினர் ஒருவர் அவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிவாஜி ரூ.35 லட்சத்துடன் காரில் தன்னுடைய உறவினர்களுடன் ஈரோடு லக்காபுரம் சென்றார்.

அப்போது காரில் 2 பேருடன் வந்த ராஜ்குமார் பணத்துடன் வந்த சிவாஜியையும், அவருடன் வந்த உறவினர் ஒருவரையும் காரில் ஏற்றிக்கொண்டு பணம் தருவதாக அழைத்து சென்றார். சிறிது தூரம் சென்றதும் மற்றொரு கார் இவர்கள் சென்ற காரை மறித்தது. அதில் இறங்கியவர்கள் தாங்களை அரசு அதிகாரிகள் என்று கூறி, சிவாஜியையும் அவருடன் வந்த உறவினர் ஒருவரையும் இறக்கிவிட்டு, பணத்துடன் மற்றவர்களை அழைத்து சென்றுவிட்டனர். சிறிது நேரத்துக்கு பிறகுதான் தான் ஏமாற்றப்பட்டதை சிவாஜி உணர்ந்தார். அதன்பின்னர் மொடக்குறிச்சி போலீ்சில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த பணம் பறிப்பு வழக்கில் தொடப்புடைய நாமக்கல் மாவட்டம் வேலூர் அருகே உள்ள பொத்தனூரை சேர்ந்த மாதேஸ் மற்றும் கரூர் மாவட்டம் காந்திகிராமத்தை சேர்ந்த கண்ணன் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நேற்று கரூர் மாவட்டம் வெங்கமேடு அருகே உள்ள கலைவாணர் என்.எஸ்.கே. நகரை சேர்ந்த சின்னதுரை (வயது 50) என்பவரை அவருடைய வீட்டில் வைத்து மொடக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம் பறிப்பு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜ்குமார் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்