ஆண்டிப்பட்டியில் குறுவட்ட விளையாட்டு போட்டிகள்

ஆண்டிப்பட்டியில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது

Update: 2022-09-08 16:48 GMT

ஆண்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கான சிறு, குறு வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. கபடி, கோகோ, வளைபந்து, எறிபந்து உள்ளிட்ட போட்டிகளில் ஆண்டிப்பட்டி, வைகை அணை, ராஜதானி பகுதிகளை சோ்ந்த 21 பள்ளி அணிகள் விளையாடின. இன்று நடந்த கபடி இறுதி போட்டியில் ஆண்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாலக்கோம்பை மேல்நிலைப்பள்ளி அணிகள் மோதின. இதில் 32 புள்ளிகள் பெற்று ஆண்டிப்பட்டி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்றது. பாலக்கோம்பை அணி 20 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்