தமிழ்நாட்டில் இன்று 15 இடங்களில் சதமடித்த வெயில்

தமிழ்நாட்டில் 15 இடங்களில் இன்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.

Update: 2023-07-31 15:38 GMT

சென்னை,

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வைதத்து வரக்கூடிய நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

இந்தநிலையில், அதிகபட்சமாக மதுரை நகர்ப்பகுதியில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. அதற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி, ஈரோடு ஆகிய பகுதிகளில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவானது.

இதேபோன்று நாகை, கடலூர், அதிராம்பட்டினம் பகுதிகளில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், கரூர் பரமத்திவேலூர், காரைக்கால், பரங்கிப்பேட்டை, தஞ்சாவூர், வேலூர் ஆகிய பகுதிகளில் டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இன்னும் 2 நாட்களுக்கு தமிழ்நாட்டை பொறுத்தவரை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்