தாளவாடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தாளவாடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்
வனவிலங்குகளை பாதுகாக்க தமிழக அரசு மின்வேலி அமைக்க புதிய அரசாணையை அமல்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து நேற்று காலை தாளவாடி பஸ் நிலையம் அருகே விவசாயிகள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த அரசாணையை திரும்ப பெறும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் கோஷங்களும் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.