மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக மெழுகுவர்த்தி ஏந்தி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதை கண்டித்து மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக கம்பம் காந்திசிலை அருகே கம்பம் நகர இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கம்பம் நகரச் செயலாளர் மணி அரசன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் லெனின், மாதர் சங்க நகர செயலாளர் சித்திகா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது பெண்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை கைது செய்யக்கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.