ஸ்ரீவைகுண்டத்தில் வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் முகாம்
ஸ்ரீவைகுண்டத்தில் வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வருங்கால வைப்புநிதி நிறுவனம் மாதம் தோறும் இந்திய அளவில் அனைத்து மாவட்டங்களிலும் வருங்கால வைப்புநிதி விழிப்புணர்வு மற்றும் குறைதீர்க்கும் முகாமை நடத்தி வருகிறது. இந்த மாதத்துக்கான முகாம் ஸ்ரீவைகுண்டம் யூனியன் அலுவலகத்தில் நடந்தது. முகாமில் வைப்புநிதி உறுப்பினர்கள், ஓய்வூதியதாரர்கள், நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்றவர்களின் சந்தேகங்கள் மற்றும் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டது. ஓய்வூதியம் சம்பந்தமாக விளக்கம் அளிக்கப்பட்டது.
முகாம் ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட வருங்கால வைப்புநிதி உதவி ஆணையாளர் ஷாஜி வழிகாட்டுதலின்படி, திட்டக்குழு அதிகாரி கோமதி சுந்தரவேல், செல்லப்பா, ராஜசேகரன், பாலமுருகன் ஆகியோர் செய்து இருந்தனர்.