ஸ்ரீமுஷ்ணத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தர்ணா கோரிக்கை மனுவில் ரத்தத்தில் கையெழுத்திட்டதால் பரபரப்பு

ஸ்ரீமுஷ்ணத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனா். அப்போது கோரிக்கை மனுவில் ரத்தத்தில் கையெழுத்திட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-17 20:12 GMT

ஸ்ரீமுஷ்ணம், 

ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் சத்துணவு மையங்களிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும், குழந்தைகளின் நலன் கருதி சத்துணவு மையங்களில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட வேண்டும், தற்போது வழங்கும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.2000-த்தை தேர்தல் வாக்குறுதி படி ரூ.6750 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு மாநில துணை தலைவர் கீதா தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் செல்வி முன்னிலை வகித்தார். இதில் புவனேஸ்வரி, கவிதா, அமராவதி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கோாிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி, ரத்தத்தால் கையெழுத்திட்டு, உதிரம் சிந்தி உரிமையை பெறுவோம் என்ற முழக்கத்துடன் ரத்த கையெழுத்து இயக்கம் நடத்தினர். ரத்த கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை கடலூர் மாவட்ட ஒப்படைப்பதாக சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்