தென்னக காசி பைரவர் கோவிலில்தேய்பிறை அஷ்டமி சிறப்பு யாகம்

தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு யாகம் நடைபெற்றது

Update: 2023-08-08 22:02 GMT

அறச்சலூர் அருகே உள்ள ராட்டை சுற்றிபாளையத்தில் பிரசித்தி பெற்ற தென்னக காசி பைரவர் கோவில் அமைந்துள்ளது. ஆசியாவிலேயே மிக உயரமான 39 அடி உயரம் கொண்ட பைரவர் சிலை இங்கு உள்ளது. மேலும் அனுமன் நதி, மயானம் என இயற்கையாகவே அமைந்துள்ள இடத்தில் சொர்ண ஹர்ஷண பைரவர் கோவில் இருக்கிறது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இந்த கோவிலில் மண்விளக்கு பூஜை நடைபெறும். இதேபோல் பவுர்ணமி, அமாவாசை மற்றும் தேய்பிறை அஷ்டமி நாட்களில் கோவிலில் சிறப்பு யாக பூஜைகள் நடைெபற்று வருகிறது. அதன்படி நேற்று கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி காலை முதலே பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்றன. மாலை 4 மணி அளவில் சொர்ண ஹர்ஷண பைரவருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. அறச்சலூர், ராட்டை சுற்றிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, கருவறைக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடு களை பைரவா பவுண்டேசன் நிர்வாகி விஜயசாமிகள் ெசய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்