சத்தியமங்கலத்தில்ரூ.3½ லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
சத்தியமங்கலத்தில் ரூ.3½ லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம் போனது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் கோபி ரோட்டில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு விவசாயிகள் 2,096 வாைழத்தார்களை கொண்டு வந்திருந்தனர்.
இதில் பூவன் (தார்) ரூ.860-க்கும், தேன்வாழை ரூ.760-க்கும், செவ்வாழை ரூ.950-க்கும், ரஸ்தாலி ரூ.550-க்கும், பச்சைநாடன் ரூ.480-க்கும், ரொபஸ்டா ரூ.550-க்கும், மொந்தன் ரூ.420-க்கும், கதலி (கிலோ) ரூ.68-க்கும், நேந்திரம் ரூ.48-க்கும் ஏலம்போனது. மொத்தம் ரூ.3 லட்சத்து 67 ஆயிரத்து 443 ரூபாய்க்கு வாழைத்தார்கள் ஏலம்போனது.
கோவை, திருப்பூர், கோபி, சத்தியமங்கலம் மற்றும் கேரள மாநில வியாபாரிகள் வாழைத்தார்களை ஏலம் எடுத்து சென்றனர்.