சத்தியமங்கலம் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்தவர் கைது

சத்தியமங்கலம் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்தவரை போலீசாா் கைது செய்தனா்.;

Update: 2023-06-12 21:24 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் வனச்சரகத்துக்குட்பட்ட கே.என்.பாளையம் அருகே உள்ள ஆரியங்கோம்பை வனச்சரகப்பகுதியில் சத்தியமங்கலம் வனச்சரகர் பழனிச்சாமி மற்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.

இதனால் அவரை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் சத்தியமங்கலம் அருகே உள்ள புளியங்கோம்பையை சேர்ந்த மீசை என்கிற கோதண்டன் (வயது 49) என்பதும், வனவிலங்குகளை வேட்டையாட வனப்பகுதியில் சுற்றி திரிந்ததாகவும், உரிமம் இன்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததாகவும் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கி, டார்ச் லைட் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்