குடியிருப்பு பகுதியில்காயத்துடன் மீட்கப்பட்ட மயில் இறந்தது
ஆண்டிப்பட்டியில் குடியிருப்பு பகுதியில் காயத்துடன் மீட்கப்பட்ட மயில் இறந்தது.;
ஆண்டிப்பட்டி ஏத்தகோவில் சாலையில் உள்ள நக்கலக்கரடு பகுதியில் மயில்கள் அதிக அளவில் உள்ளன. அந்த பகுதியில் இருந்து ஒரு ஆண் மயில் கால் உள்ளிட்ட பகுதிகளில் லேசான காயத்துடன் பாலாஜி நகர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதையடுத்து பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், ஆண்டிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் காயமடைந்த ஆண் மயிலை பத்திரமாக மீட்டு அதற்கு தண்ணீர் கொடுத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன்பின்னர் ஆண்டிப்பட்டி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து மீட்கப்பட்ட மயிலை அவர்களிடம் ஒப்படைத்தனர். இதையடு்த்து அந்த மயிலை ஆண்டிப்பட்டி வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்ற வனத்துறையினர் மயிலுக்கு சிகிச்சை அளித்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு மயில் பரிதாபமாக இறந்தது.