பெரியகுளம் கலவரம்-தாக்குதல் தொடர்பாகநீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்

பெரியகுளம் கலவரம் தொடர்பாக நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியினர் வலியுறுத்தினர்.

Update: 2023-04-17 18:45 GMT

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி அரசு சட்டக்கல்லூரியில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவருடைய உருவப்படம் வைக்கப்பட்டு இருந்தது. அதை விரும்பாத சிலர் அம்பேத்கர் உருவப்படத்தை கிழித்தனர். அதுதொடர்பாக வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு எந்த நடவடிக்கையும் இல்லை.

பெரியகுளத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது சிலர் மீது போலீசார் திடீர் தடியடி நடத்தியதால் கலவரம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இதுகுறித்து பணியில் இருக்கும் நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்கப்பட வேண்டும். போலீஸ் துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட இந்த மோதலின் உண்மைத்தன்மையை அதன் காரணங்களை கண்டறிய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்