புஞ்சைபுளியம்பட்டியில்மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்; கணவன்- மனைவி பலி
புஞ்சைபுளியம்பட்டியில் மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிக்கொண்ட விபத்தில் கணவன் மற்றும் மனைவி பலியாகினர்.;
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டியில் மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிக்கொண்ட விபத்தில் கணவன் மற்றும் மனைவி பலியாகினர்.
மோதல்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா சிறுமுகை ரேயான் நகரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 74). இவருைடய மனைவி சரோஜா (70). இவர்கள் 2 பேரும் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றனர்.
புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலையம் அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி ஒன்று மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
சாவு
இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அன்னூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 2 பேரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.