புஞ்சைபுளியம்பட்டியில்நகராட்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
புஞ்சைபுளியம்பட்டியில் நகராட்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.
புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராக்கி முத்து, செயலாளர் விஜய மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி ஆணையர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறி அதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதில் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி தூய்மை பணியாளர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.