திட்டச்சேரியில் சாலை அமைக்கும் பணிகளை அதிகாரி ஆய்வு
திட்டச்சேரியில் சாலை அமைக்கும் பணிகளை அதிகாரி ஆய்வு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
திட்டச்சேரி:
திட்டச்சேரியில் நாகூர்-நன்னிலம் நெடுஞ்சாலை சேதமடைந்து காணப்பட்டது. இதை தொடர்ந்து அங்கு புதிதாக சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அய்யாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சாலை அகலம் மற்றும் உயரம் அரசு அறிவித்த அளவிற்கு உள்ளதா? என்பதை ஆய்வு செய்தார்.பின்னர் சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினர். இந்த ஆய்வின்போது அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.