பொள்ளாச்சியில் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

பொள்ளாச்சியில் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது;

Update: 2022-10-25 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே பெரிய கவுண்டனூர் கல்பனா வீதியில் சேவல் சூதாட்டம் நடப்பதாக பொள்ளாச்சி கிழக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் சென்றது. இதனையடுத்த, சம்பவ இடத்துக்கு விரைந்தசென்ற போலீசார், அங்கு சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட உடுமலை சேர்ந்த பாண்டியன் (வயது 29), பொள்ளாச்சி மோகனசுந்தரம் (50) ஆகியோரை கைது செய்தனர். தப்பிஓடிய விசுவநாதன் (33) என்பவரை தேடி வருகின்றனர். சூதாட்டநபர்களிடமிருந்து 2 சேவல்கள் 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், பொள்ளாச்சி சீலக்காம்பட்டி வாய்க்கால் மேடு பகுதியில் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட அனுப்பர்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் (42), முத்துக்குமார் (40), கணேஷ் (43) மற்றும் ஆலம்பளையத்தை சேர்ந்த கபிர்தாஸ் (46) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒரு சேவல் மற்றும் ரூ.4 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்