'அரசியலில் மதங்களை தவிர்த்து மக்களுக்கான விவாதங்கள் மட்டுமே இருக்க வேண்டும்' - துரை வைகோ

அரசியலில் மதங்களை தவிர்த்து மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றிய விவாதங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என துரை வைகோ தெரிவித்தார்.

Update: 2024-06-02 09:01 GMT

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"எனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது. நான் இந்து மதத்தைச் சார்ந்தவன்தான். ஆனால் அரசியல் என்று வரும்போது, மதங்களை தவிர்த்து மக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை கடமைகளைப் பற்றிய விவாதங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். 'இந்தியா' கூட்டணி சார்பில் எங்கள் வாதங்களை முன்வைத்து நாங்கள் பிரசாரம் செய்தோம். பா.ஜ.க. அணியினர் அவர்களின் வாதங்களை முன்வைத்தார்கள். மக்கள் எதை ஏற்றுக்கொண்டார்கள் என்பது இன்னும் 2 நாட்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது தெரிந்துவிடும்."

இவ்வாறு துரை வைகோ தெரிவித்தார்.

Full View

 

Tags:    

மேலும் செய்திகள்