பெரியகுளத்தில்மதுபான கடையை முற்றுகையிட்ட முஸ்லிம்கள்
பெரியகுளத்தில் மதுபான கடையை முஸ்லிம்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
பெரியகுளம் புதிய பஸ் நிலையம் முன்பு தனியார் மதுபான கடை மற்றும் பார் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் முஸ்லிம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். ஆனால் அதன்பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை அந்த கடையை முஸ்லிம் அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தகவல் அறிந்த பெரியகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.