பெரியகுளம் நகராட்சியில்தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பெரிகுளம் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-06-01 18:45 GMT

பெரியகுளம் நகராட்சியில் குப்பைகள் அள்ளுதல், சாக்கடை தூய்மை பணி, கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பல்வேறு தூய்மை பணிகளுக்கு 100 தற்காலிக பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இவர்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தூய்மை பணியாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.550 சம்பளம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பின்னா் தானாக கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்