பரமக்குடியில், 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

பரமக்குடியில், 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-07-05 18:15 GMT

பரமக்குடி,

தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் பரமக்குடியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பேக்கரிகள், புரோட்டா கடைகள், பழக்கடைகள் உள்பட மொத்த விற்பனை கடைகளில் அதிக அளவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை அறிந்த நகராட்சி அலுவலர்கள் ஆணையாளர் திருமால் செல்வம் தலைமையில் நகரில் உள்ள 11 கடைகளுக்கு திடீரென சென்று சோதனை செய்தனர். அப்போது கடையில் இருந்த பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து நகராட்சி வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். மொத்தம் 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அந்த கடைகளுக்கு அபராதம் விதித்து தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்