பழங்குளத்தில் 2 மின் மாற்றிகள் திறப்பு

பழங்குளத்தில் 2 மின் மாற்றிகள் திறப்புவிழா நடந்தது.

Update: 2022-11-11 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே பழங்குளத்தில் மின் தாழ்வழுத்த மின் பாதைகள் பிரிக்கப்பட்டு 63 கே.வி.ஏ, 100 கே.வி.ஏ திறன் கொண்ட மின்மாற்றிகளாக அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இவற்றின் திறப்புவிழாவுக்கு பழங்குளம் ஊராட்சித் தலைவர் செல்வக்கனி செல்லத்துரை தலைமை தாங்கினார். மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரவீந்திரகுமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் குணசீலி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி பொறியாளர் எட்வர்ட் வரவேற்றார். ஆனந்தபுரம் சேகரத் தலைவர் ஜெபஸ் தங்கராஜ்ஆபிரகாம் மின்மாற்றிகளை இயக்கி தொடங்கி வைத்தார். இதில் பழனியப்பபுரம் உதவி பொறியாளர் ராதாமணி உள்ளிட்ட மின் ஊழியர்கள், ஊராட்சி செயலர் இசக்கியப்பன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்