ஊட்டி, குன்னூரில் கொய்மலருக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றம்

ஊட்டி, குன்னூரில் கொய்மலருக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளார்கள்.

Update: 2023-08-31 19:45 GMT


குன்னூர்


ஊட்டி, குன்னூரில் கொய்மலருக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளார்கள்.


கொய்மலா் சாகுபடி


நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தப் படியாக கொய்மலர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த மலர் சாகுபடி மேற்கொள்ள தோட்டக்கலைத் துறை சார்பில் பயிற்சி கொடுக்கப்பட்டு வங்கி மூலம் கடன் வழங்கப்பட்டது. இதில் முக்கிய ெகாய் மலர்களான கார்னேஷன், லில்லியம் ஜெர்பரா உள்ளிட்ட மலர்கள் குடில்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக கொய் மலர்களுக்கு விலை இல்லாமல் விவசாயிகள் பாதிப்படைந்து வந்தனர்.


விலை ஏற்ற இறக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மலர்களை பறிக்க கூட இயலாத நிலையில் இருந்தனர்.


எதிர்பாா்த்த விலை கிடைக்கவில்லை


விஷேச நிகழ்ச்சி இல்லாதது ஒரு காரணமாக இருந்தாலும் பிளாஸ்டிக் பூக்களால் கொய்மலருக்கு கிராக்கி இல்லாமல் இருந்தது.


இந்த நிலையில் ஆடி மாதத்திற்கு பிறகு தற்போது விழா காலங்கள் என்பதால் கொய்மலருக்கு சற்று விலை அதிகரித்துள்ளது.


ஆனால் எதிர்பாா்த்த விலை கிடைக்கவில்லை. இதுகுறித்து ெகாய் மலர் விவசாயிகள் கூறியதாவது: 20 பூக்கள் கொண்ட ஒரு பண்டல் கார்னேசன் மலர் 150 ரூபாயிலிருந்து 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனையாகிறது. வில்லியம் 20 ரூபாயிலிருந்து 24 ரூபாய் வரையிலும், ஜெர்பரா 10 ரூபாய் வரை விற்பனை ஆகிறது.


தற்போதைய விற்பனை விலை பற்றாகுறையாக உள்ளது. சந்தைகளில் பிளாஸ்டிக் பூக்கள் பயன்படுத்துவதால் மலர் சாகுபடி விவசாயம் நலிவடைந்து வருகிறது. எனவே, குன்னூர் மற்றும் ஊட்டியில் பிளாஸ்டிக் பூக்கள் தடைசெய்யப்பட்டது போன்று நாடு முழுவதும் பிளாஸ்டிக் பூக்கள் தடை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags:    

மேலும் செய்திகள்