நாசரேத்தில் கடை சூறை; ஒருவர் கைது

நாசரேத்தில் கடை சூறையாடியவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-11-30 18:45 GMT

நாசரேத்:

நாசரேத் 2-வது ஐசக் தெருவைச் சேர்ந்த பூமி ஜெயசிங் மகன் பூமி ஸ்டாலின் (வயது40). இவர் நாசரேத் வியாபாரிகள் சங்க தெருவில் பிரகாசபுரம் அர்ஜூனன் என்பவருக்கு சொந்தமான கடையில் சவப்பெட்டி மற்றும் மர சாமான்கள் செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்த கடையை நடத்துவதில் அர்ஜூன் என்பவருக்கும், பரமன்குறிச்சி ஜெபசிங் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 25-ந்தேதி பூமி ஸ்டாலின் கடையில் இருந்த போது, மெஞ்ஞானபுரம் அருகே மாணிக்கபுரம் கோவில் தெருவைச் சேர்ந்த முத்து மகன் ரவிச்சந்திரன் கடைக்குள் அத்துமீறி நுழைந்து இரும்பு கம்பியால் கடையை உடைத்தும், அங்கிருந்த சவபெட்டிகளை அடித்து உடைத்து, மர ச்சாமான்களை வெளியே தூக்கி போட்டதாக தெரிகிறது. இதனை அறிந்த பூமி ஸ்டாலின், அருகில் உள்ள புரோட்டா கடைகாரர் ஆரோ னும் தட்டிக்கேட்டபோது இருவரையும் இது எங்கள் கடை என கூறி கொலை செய்து விடுவதாக மிரட்டி சென்று விட்டார்.

இதுகுறித்து குறித்த புகாரின் பேரில் நாசரேத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராய்ஸ்டன் வழக்கு பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்