நாசரேத்தில்வாலிபர் அரிவாளால் வெட்டிய தாய் சாவு
நாசரேத்தில் வாலிபர் அரிவாளால் வெட்டிய தாய் இறந்து போனார்.;
நாசரேத்:
நாசரேத்தில் வாலிபரால் அரிவாளால் வெட்டப்பட்ட தாய் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
துக்க வீட்டில் பிரச்சினை
நாசரேத் கந்தசாமிபுரத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ் ஜீவானந்தம் (வயது 65). இவருக்கு எபநேசர் என்ற மனைவியும், டேவிட் அழகு ரத்தினம் (37), ஐசக் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். பிரான்சிஸ் ஜீவானந்தம் ரேஷன் கடையில் வேலை பார்த்து, ஓய்வு பெற்று பின்னர் சொந்தமாக லாரி வைத்து குடிநீர் சப்ளை செய்யும் தொழில் செய்து வந்தார். டேவிட் அழகு ரத்தினத்திற்கு திருமணம் ஆகி தனது மனைவியை பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில் கடந்த 22-ந்தேதி பிரான்சிஸ் ஜீவானந்தம் திடீரென மாரடைப்பால் இறந்தார். இதற்கான துக்க நிவர்த்தி ஜெபக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
அரிவாள் வெட்டு
அப்பொழுது டேவிட் அழகு ரத்தினம், தனது தாய் எபநேசரிடம் செலவுக்கு பணம் கேட்டார். தாய் பணம் தர மறுத்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தாய்க்கு ஆதரவாக அழகு ரத்தினத்தின் தம்பி ஐசக் பேசி உள்ளார். இதில் ஆத்திரமடைந்த டேவிட் அழகு ரத்தினம் அருகில் இருந்த அரிவாளால் ஐசக்கின் காலில் வெட்டினார். இதை தடுக்க வந்த எபநேசரையும் அவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு டேவிட் அழகு ரத்தினம் தப்பி ஓடிவிட்டார். இதில் காயம் அடைந்த இருவரையும் உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஐசக் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
கொலை வழக்காக மாற்றம்
ஆனால் எபிநேசர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்ைச பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி எபநேசர் பரிதாபமாக பஇறந்து போனார். இதை தொடர்ந்து நாசரேத் போலீசார் கொலை வழக்காக மாற்று பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே, டேவிட் அழகு ரத்தினத்தை நாசரேத் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.