நாசரேத்தில்சணல்பை தயாரிக்கும் பயிற்சி முகாம்
நாசரேத்தில் சணல்பை தயாரிக்கும் பயிற்சி முகாம் நடந்தது.;
நாசரேத்:
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல சமூக நலத்துறையின் சார்பில் நாசரேத் அருகே உள்ள திருமறையூர் சேகரம் மறுரூப ஆலய வளாகத்தில் சணல் பை தயாரிக்கும் பயிற்சி முகாம் 2 நாட்கள் நடைபெற்றது. திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனை துறையின் இயக்குனரும், திருமறையூர் சேகர குருவானவருமான ஜாண் சாமுவேல் தலைமை தாங்கி, பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து எளிதில் மக்க கூடிய பூமியை சேதப்படுத்தாத வகையில் பைகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைத்தார். சமூக நலத்துறை இயக்குனர் ஜெபக்குமார் ஜாலி கைத்தொழிலின் முக்கியத்துவத்தை குறித்தும், ஜெபிதா ஜாலி பெண்கள் தொழில் முனைவதின் நன்மைகள் குறித்தும் பேசினர். தூத்துக்குடியை சேர்ந்த எர்னஸ்ட், வள்ளி ஆகியோர் பயிற்சி அளித்தனர். சுமார் 50 பெண்கள் பயிற்சி பெற்றனர்.