நாசரேத்தில் புதிய தார் சாலை அமைக்கும் பணி
நாசரேத்தில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
நாசரேத்:
நாசரேத் நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட கொர்நேலியஸ் தெருவில் தார் சாலை அமைக்கும் பணியை நகர பஞ்சாயத்து தலைவர் நிர்மலா ரவி தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் ரவி செல்வகுமார், செயற்பொறியாளர் விஜயகுமார், நகர பஞ்சாயத்து கவுன்சிலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.