நாசரேத்தில் மின்சாரம் தாக்கி 3 எருமை மாடுகள் பலி

நாசரேத்தில் மின்சாரம் தாக்கி 3 எருமை மாடுகள் பலியாகின.

Update: 2023-07-06 18:45 GMT

நாசரேத்:

நாசரேத் - வெள்ளரிக்காயூரணியைச் சேர்ந்த மாடசாமி மகன் பூல்பாண்டி (வயது 33). இவர் எடுமை மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று பூல்பாண்டி தனது எருமை மாடுகளை பிரகாசபுரம் மறுகால்துறை ஓடையில் மேயவிட்டுள்ளார். அப்போது அந்த பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பியை எருமை மாடுகள் மிதித்ததில் மின்சாரம் தாக்கி 3 எருமை மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின. இது குறித்து பூல்பாண்டி அளித்த புகாரின் பேரில் நாசரேத் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராய்ஸ்டன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்