நாகையில், பெண்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து நாகையில், பெண்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;
நாகை அவுரி திடலில் தமிழ்நாடு பெண்கள் கூட்டமைப்பு சார்பில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு பெண்கள் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிலோமினா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவி கவிதா முன்னிலை வைத்தார். இதில் மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்தும், கலவரத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.