நாகையில், 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை
மேற்கு மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அதே போல் அரபிக்கடலில் தேஜ் புயல் உருவாகியுள்ளது. இதில் வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது வடமேற்கு, வடக்கு -வடகிழக்கு திசையில் நகரக்கூடும் என்றும், இதனால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் நாகையில் உள்ள துறைமுக அலுவலகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மீன்வளத்துறை சார்பில் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் யாரும் மீன்பிடிக்க ஆழ்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.